மே 9 வன்முறையைத் தொடர்ந்து தனது பதவியை இராஜினாமா செய்திருந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தற்போது மீண்டும் பிரதான அரசியல் நீரோட்டத்தில் தன்னை இணைத்தியங்கி வருகிறார்.
இந்நிலையில், ராஜபக்ச அரசினை முழுமையாக ஆதரித்து வந்த சீனாவின் இலங்கைக்கான தூதர் மஹிந்தவை சென்று சந்தித்து, இரு நாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது, இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என சீன தூதர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment