ஆசிரியர்கள் போராட்டக் களத்தில் குதித்திருக்கிறார்கள். “சாது மிரண்டால் காடு தாங்காது” என்பார்கள். சம்பளம் அதிகமாகப் பெறும் எத்தனையோ அதிகாரிகள் தொடர்ந்தும் வேலை நிறுத்தம் செய்த சம்பவங்களைக் கண்ணால் கண்டிருக்கிறோம். அவற்றை நியாயம் எனக் கருதிய சமூகத்திற்கு ஆசிரியர்களின் போராட்டம் அநியாயம் எனப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் பாடசாலைக்குச் சென்றவர்கள்தான். உயர் பதவி வகிக்கும் அனைவரும் ஆசிரியர்களின் வழிகாட்டலில் பயின்றவர்கள்தான். நமது குழந்தைகளுக்கும் நல்ல பாடசாலை, நல்ல ஆசிரியர்கள், நல்ல கல்வி எனத் தேடித் தேடி ஒழுங்குபடுத்தும் நாம், ஆசிரியர்களின் நலனில் (Well-being) யில் அக்கறை கொள்வதில்லை.
மாறாக, சமூகத்தில், ஆசிரியர்களை ஒருவிதமான தாழ்வான (Inferior) மனநிலையில் பார்க்கும் மனோபாவத்தைக் (Attitude) கொண்டிருக்கிறோம். என்ன ஒரு கேவலமான சமூகம் நாம். நாம் ஆசிரியர்களிடம் பயின்று நல்ல நிலையில் இருக்கிறோம். நம் பிள்ளைகளுக்கும் நல்ல ஆசிரியர்களை எதிர்பார்க்கிறோம். ஆனால், ஆசிரியர்களுக்கு போதுமான சமூக அந்தஸ்தினைக் (Social Status) கொடுக்கத் தயங்குகிறோம். ஆசிரியர்கள் விடயத்தில் மனதளவில் நாம் எல்லோரும் வலது குறைந்தவர்கள் (Intellactual Disability).
ஆசிரியர்களின் பணி மகத்தானது. ஆசிரியர்கள் மாண்பு மிக்கவர்கள். சமூகத்தில் ஆசிரியர்கள் பற்றிய கண்ணோட்டத்தினை மாற்றி ஆசிரியர்களினை உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் நிலை முழுமையாக ஏற்படும் வரை முயற்சிக்க வேண்டியது சமூகத்தின் ஒவ்வொருவர் மீதும் தலையாய கடமையாகும்.
ஜனாதிபதி, அமைச்சர், பணிப்பாளர்கள், வைத்தியர்கள் இப்படி எல்லோரையும் உருவாக்கி தங்களை உருக்கிய ஆசிரியர்களே உலகின் மேன்மையான பிறவிகள்.
கலீபா அலி (றழி) கூறும் போது “ஓரெழுத்துக் கற்றுத் தந்தவருக்கும் நான் அடிமை” என்று ஆசியர் மாண்புகளைப் பற்றி அழுத்தமாகச் சொன்னார்கள்.
ஆசிரியர்கள் மனநிறைவாகவும் சமூகத்தில் மிக உயர் அந்தஸ்தில் உள்ளவர்களாகவும் வாழும் வகை செய்வோம். அவர்கள் போராட்டம் வெற்றி பெற மனதார வாழ்த்துவோம்.
- அபூ ஸைனப்
No comments:
Post a Comment