கடந்த சில நாட்களாக கொழும்பில் கொரோனா தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் துரித கதியில் PCR பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கிறது சுகாதார அமைச்சு.
கொரோனா பரிசோதனைகளை குறைந்த அளவிலேயே இடம்பெற்று வரும் நிலையில் நாட்டின் வைரஸ் பரவலின் அளவும் வெகுவாக குறைத்து மதிப்பிடப்படுவதாக எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டி வந்தனர்.
எனினும், இது தொடர்பில் அலட்சியம் காட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தொற்றின் விகிதம் அதிகரிததுள்ளது. இப்பின்னணியில் பரிசோதனைகளை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் தொகை 322 என்பதோடு இன்றைய தினம் இதுவரை 12 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment