இலங்கையில் பௌத்த அடிப்படைவாதத்தை விதைப்பதற்கும் அதனூடாக நாட்டில் இன வன்முறைகளைத் தூண்டுவதற்கும் பொது பல சேனா பயங்கரவாத அமைப்புக்கு நோர்வே நிதி வழங்கியிருந்ததாக ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார் விஜேதாச ராஜபக்ச.
நல்லாட்சியில் தான் நீதியமைச்சராக இருந்த போது இது குறித்த தகவல்களை தேடி அறிந்து கொண்டதாகவும் குளியாபிட்டிய மற்றும் கூரகல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளை ஞானசார தலைமையிலான கடும்போக்குவாதிகள் முயன்ற போது அதனைத் தானே தனது அதிகாரத்தைக் கொண்டு முடக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொது பல சேனா சார்பு கடும்போக்குவாத பௌத்த துறவிகளை நோர்வேக்கு அழைத்து விரிவுரைகள் வழங்கி அவர்களை இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு செல்வதற்கு நோர்வேயிலிருந்து அனுசரணை வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment