எதிர்கால உலகுக்குத் தயாராவதற்கு, இலங்கை சிறுவர்கள் ஹிந்தி மற்றும் சீன மொழிகளையும் கற்க வேண்டிய தேவை உருவாகி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
நுகேகொட, அனுலா வித்தியாலய பரிசளிப்பு நிகழ்வில் வைத்தே நேற்றைய தினம் இவ்வாறு தெரிவித்துள்ள ஜனாதிபதி, தொழிநுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல் என பல்வேறு எதிர்காலத்துக்குத் தேவையான அறிவை எதிர்கால சந்ததிக்கு வழங்க வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment