பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானதாகக் கருதப்படும் சர்ச்சைக்குள்ளான மல்வானை வீடு அரசுடமையாகியுள்ளதாக தெரிவிக்கிறார் விஜேதாச ராஜபக்ச.
குறித்த வீட்டினை உரிமை கோர யாரும் முன் வராததால் அதனை அரசுடமையாக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைத் தாம் சமர்ப்பித்ததாகவும் அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் விஜேதாச நாடாளுமன்றில் வைத்து விளக்கமளித்துள்ளார்.
பெரும் பொருட் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை பசில் ராஜபக்சவும் கை விட்டிருந்த நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment