மஹிந்த ராஜபக்ச என்ன செய்தார், செய்யவில்லையென்பதை வைத்து தன்னை எடை போட வேண்டாம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, தான் ரணில் ராஜபக்ச இல்லை மாறாக ரணில் விக்கிரமசிங்க என நினைவூட்டியுள்ளார்.
தமிழ் தரப்பினருடனான நேற்றைய விசேட சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர். வட - கிழக்கில் தமிழ் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு 'நிரந்தரமான' தீர்வினைத் தருவதில் தான் நேர்மையான அக்கறையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
சுமந்திரன் உட்பட தமிழ் அரசியல் சமூக பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment