இவ்வருட இறுதியுடன் முட்டை இறக்குமதிக்கான தேவை முடிவுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர.
கொரோனா பெருந்தொற்றின் பின்னணியில் கோழி வளர்ப்பு பாதிக்கப்பட்டதாகவும் இதனூடாக ஏற்பட்ட சூழ்நிலையை சமாளிக்கவே முட்டை இறக்குமதிக்கான முடிவெடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
எனினும், தற்போது சூழ்நிலை மாறி வருவதாகவும் இவ்வருட இறுதியுடன் உள்நாட்டு உற்பத்தி போதியதாக இருக்குமெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment