ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு தற்போதுள்ள நான்கு வருட சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக ஆறு மாத கால கடூழிய சிறைத்தண்டனை வழங்கியுள்ளது மேன்முறையீட்டு நீதிமன்றம்.
நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியிலேயே முன்னைய தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டதன் பின்னணியில் இன்றைய தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த காலத்தில் நீதிமன்றுக்குள்ளேயே புகுந்து அடாவடி புரிந்த ஞானசாரவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment