தனது தந்தை ரணசிங்க பிரேமதாச செய்த நல்லவற்றை தொடர்வேனே தவிர, தந்தை பிழை செய்திருந்தால் அதனை தொடர மாட்டேன் என்கிறார் சஜித் பிரேமதாச.
சுய புத்தியும், சிந்தனையும் உள்ள 'புதல்வன்' என்ற அடிப்படையில் தான் சுயமாகவே சிந்தித்து செயற்படப் போவதாக தினேஷ் குணவர்தனவுக்கு பதிலளிக்கையில் சஜித் தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாறும் போது அரசியல் பழிவாங்கலால் தொழில் நியமனங்கள் பறிக்கப்படுவது குறித்த விவாதத்தின் போதே சஜித் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளமையும், பிரேமதாச ஆட்சியில் 83000 க்கு அதிகமானோர் வேலையிழந்ததாக தினேஷ் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment