வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, கொழும்பு 7ல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வீடொன்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக தெரிவிக்கிறார் சாணக்கியன்.
தற்போது கோட்டாபய வசிக்கும் வீட்டைச் சுற்றி 'சப்தம்' அதிகமாக இருப்பதால் கொழும்பு 7ல் அமைதியான பகுதியான ஸ்டன்மோர் கிரசன்டில் இவ்வீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அது வெளியுறவுத்துறை அமைச்சின் பரிபாலனத்தில் இருப்பதாகவும் சாணக்கியன் மேலும் தெரிவிக்கிறார்.
தனது ஆஸ்தான சட்டத்தரணியாக இருந்த அலி சப்ரிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் அமைச்சுப் பதவிகளையும் பார்த்து அழகு பார்த்தவர் கோட்டாபய ராஜபக்ச என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment