50,000 லஞ்சம் பெற்ற பி.ச. செயலாளர் கைது - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 June 2023

50,000 லஞ்சம் பெற்ற பி.ச. செயலாளர் கைது

 



பிரதேச சபையினால் மீள வழங்குவதற்கு நியமிக்கப்பட்டிருந்த 2.4 மில்லியன் ரூபா பணத்தினை காசோiலாக வழங்குவதற்கு 50,000 ரூபா லஞ்சம் பெற்ற பிரதேச சபை செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சூரியவெ வ பிரதேச சபையின் செயலாளரே இவ்வாறு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு சந்தையின் கடைத் தொகுதிக்கு செலுத்தியிருந்த வரிப் பணத்தின் மீள் வழங்கலுக்காகவே இவ்வாறு லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


சந்தேக நபரை ஹம்பாந்தோட்டை நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment