நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமான நிலையத்தில் பரிசோதனைகளைத் தவிர்த்து, முக்கிய பிரமுகர்களுக்கான வருகை வழியூடாக பயணிப்பதற்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகையை நீக்க வேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளார் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர.
வெளிநாட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்பட வெண்டிய மரியாதை நிமித்தம் இவ்வசதியைப் பயன்படுத்துவதில் தனக்கு ஆட்சேபனையில்லையென தெரிவிக்கும் அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது அவசியமற்றது என தெரிவிக்கிறார்.
அண்மையில் தங்கம் கடத்திய குற்றச்சாட்டுக்குள்ளான அலி சப்ரி ரஹீம் தான் அரசால் காப்பாற்றப்படவில்லையென்பதால் அரசுக்கு எதிராக வாக்களித்து தனது 'எதிர்ப்பை' வெளிக்காட்டியமையும் தொடர்ந்தும் 'அடிக்கடி' டுபாய் பயணிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment