மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கட்சி பேதமில்லாமல் ஆதரவளித்து வரும் சிறந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என புகழாரம் வெளியிட்டுள்ளார் சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன.
மக்கள் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடுவதற்கு எதுவித நிபந்தனையுமின்றி அனுமதி தருவதோடு அக்கறையுடன் அவற்றுக்கான தீர்வையும் ஜனாதிபதி வழங்கி வருவதாகவும் தான் இவ்வாறு பல தடவைகள் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி, சமகி ஜன பல வேகயவாக இயங்கி வரும் பெரும்பாலான முன்னாள் உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்க மீது நல்லபிப்பிராயம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment