கட்டாரில் தொழில் வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக ஏமாற்றிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த இவ்விரு பெண்களும் கட்டாரில் தொழில் வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி 6 லட்சம் ரூபா பெற்று ஏமாற்றியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளதன் பின்னணியில் கைதாகியுள்ளதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
நாளை இவ்விருவரையும் நீதிமன்றுக்கு கொண்டு செல்லவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment