பௌத்த துறவியாய் இருப்பதே ஆபத்தாகி விட்டது: ஞானசார - sonakar.com

Post Top Ad

Wednesday, 31 May 2023

பௌத்த துறவியாய் இருப்பதே ஆபத்தாகி விட்டது: ஞானசார

 



நாடு இன்று மிகவும் 'பயங்கரமான' சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் பௌத்தர்கள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கிறார் பொது பல சேனாவின் ஞானசார.


பௌத்த துறவியாக இருப்பதே ஆபத்தான சூழலாகி விட்டதாகவும் பேருந்துகளில் பயணம் செய்யவும் முடியாதுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


2010 முதல் இலங்கையில் பௌத்த பேரினவாத உணர்ச்சியைக் கிளறி முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் வன்முறையைத் தூண்டி விட்ட ஞானசார, கோட்டாபய ஆட்சியில் ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி குழுவுக்கும் தலைமை தாங்கியிருந்தமையும், கோட்டாபய நாட்டை விட்டு தப்பியோடியிருந்த நிலையில் அமைதி காத்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment