நாட்டை முன்னேற்றுவதற்காக பெரமுனவினர் செய்த தியாகத்தையே இன்று மக்கள் அனுபவிப்பதாக தெரிவிக்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.
பெரமுன நிறுவிய அரசைக் காப்பாற்ற, பெரமுனவாலேயே நியமிக்கப்பட்ட ஜனாதிபதி இன்று சிறப்பான முறையில் செயற்பட்டு பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பி வருவதாக தெரிவிக்கின்ற அவர், இந்நிலையில், ஆளுங்கட்சியென்ற வகையில் தமது கட்சியினர் அர்ப்பணிப்புடன் அமைச்சுப் பதவிகளையும் தியாகம் செய்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
பெரமுன அரசமைக்க மக்கள் ஆணையைப் பெற்று ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, நாட்டை விட்டுத் தப்பியோடி தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment