தினேஷுக்கு விலக அழுத்தம்; பிரதமராக மஹிந்த முனைப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 15 May 2023

தினேஷுக்கு விலக அழுத்தம்; பிரதமராக மஹிந்த முனைப்பு

 



மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவியில் நியமிக்கப்பட வேண்டும் என்ற பெரமுன திட்டத்துக்கமைவாக தினேஷ் குணவர்தனவை பதவி விலகுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


உள்ளூராட்சித் தேர்தலை பின் தள்ளியுள்ள அரசு, ஜனாதிபதி தேர்தலை நடாத்தினால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அது சார்பாக அமைந்து விடும் எனக் கருதும் பெரமுனவினர், மஹிந்தவை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வர முயல்கின்றனர்.


எனினும், அவ்வாறான ஒரு கட்டாய சூழ்நிலையை எதிர்த்து போராட்டங்களை ஒழுங்கு செய்யவும் அரசியல் தரப்புகள் தயாராகி வருவதுடன், பெரும்பாலும் இதனூடாக நாடாளுமன்றைக் கலைப்பதற்கான முடிவை ஜனாதிபதி அறிவிக்கக் கூடும் எனவும் அரசியல் பிரமுகர்கள் ஆரூடம் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment