இஸ்தான்புல் - கொழும்புக்கான சேவையை துருக்கி விமான சேவை நிறுவனம் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்ற நிலையில் கொழும்பு - இஸ்தான்புல்லுக்கான நேரடி விமான சேவையை ஸ்ரீலங்கன் ஊடாக ஆரம்பிக்க திட்டமிடப்படுகிறது.
துருக்கி விமான சேவை மாலைதீவு வழியாகவே வருவதால் 1.30 மணி நேர தாமதம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் அதனை பயணிகள் விரும்பாத காரணத்தினால் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப் போவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் உட்பட பல விமான சேவைகள் மாலைதீவில் தரித்து வரும் சேவையை வழமையாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment