மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, கைதான ராஜாங்கனே சத்தார்த்த தேரருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
பஸ்டர் ஜெரமின் பேச்சுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் காரசாரமாக கருத்து வெளியிட்டு வந்த ராஜாங்கனே தேரர் இதற்கு முன்னர் மைத்ரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரையும் கடுமையாக விமர்சித்து வந்தவராவார்.
நகைச்சுவை பேச்சாளர் நடாஷாவும் நேற்றைய தினம் கைதாகியிருந்தமையும் இந்நிலையில் நேற்றிரவு கைதான ராஜாங்கனே தேரருக்கு ஜுன் 97ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment