இலங்கையில் ஆடைத் தொழிற்சாலையில் முதலிட்டிருந்த ஓமானியர் தாக்குதலுக்குள்ளாகியிருந்த நிலையில், அவரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தியுள்ளார் அமைச்சர் டிரன் அலஸ்.
கட்டான பகுதியில் ஓமானியரின் முதலீட்டில் இயங்கி வந்த தொழிற்சாலையை முடக்குவதற்கு பிரதேசத்தின் அரசியல்வாதியொருவர் நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், மார்ச் மாதத்தில் அவர் குண்டர்களால் தாக்குதலுக்குள்ளாகியிருந்தார்.
இந்நிலையில், தொழிற்சாலையை மூடி விட அவர் முடிவெடுத்திருந்த போதிலும் தற்போது அவரது தொழிலுக்கும் அவருக்குமான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்துவதாக வழங்கியிருக்கும் வாக்குறுதியையடுத்து, இலங்கையில் தொழிலை முன்னெடுக்க ஓமானிய முதலீட்டாளர் இணங்கியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனினும், தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment