பல்கலை கல்வியை ஊக்குவிக்க வட்டியில்லா கடன் - sonakar.com

Post Top Ad

Saturday, 27 May 2023

பல்கலை கல்வியை ஊக்குவிக்க வட்டியில்லா கடன்


அரச பல்கலைகளில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு தனியார் பல்கலைகளில் உயர் கல்வியைத் தொடர்வதற்கு ஏதுவாக வட்டியில்லாக் கடன் வசியை வழங்குவதற்கு அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் வாரம் சமர்ப்பிக்கபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


9 லட்ச ரூபா வரையான கடனும் மேலதிகமாக 3 லட்சமும் இவ்வாறு கடனாக வழங்கப்படவுள்ளதுடன் கல்வியை முடித்த பின்னர் இரு வருட காலங்களுக்குள் மீளச் செலுத்தும் நிபந்தனையில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் வருடாந்தம் 5000 மாணவர்களுக்கு இக்கடன் வசதியை வழங்க உத்தேசித்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார் பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய.


க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியெய்தும் பல்கலை அனுமதி கிடைக்காத மாணவர்களுக்காகவே இத்திட்டம் வடிவமைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment