ஆட்சியைக் குழப்பும் வகையில் எதிர்க்கட்சியினர் பிரச்சாரங்களை நடாத்தி வருவதாக தெரிவிக்கும் பிரசன்ன ரணதுங்க, சஜித் ஆசைப்படும் பிரதமர் பதவி அவருக்கு கிடைக்காது என்கிறார்.
அரசுக்குள் சர்ச்சை, மஹிந்த பிரதமராகப் போகிறார் என்பதெல்லாம் எதிர்க்கட்சிகள் கட்டுக் கதையென தெரிவிக்கும் அவர், பிரதமர் பதவி தமக்குக் கிடைக்க வேண்டும் என சஜித் ஆசைப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, பெரமுனவுக்குள் நிலவும் குழப்பத்திலிருந்து விலகிக் கொள்ள விரும்பியுள்ள ஜனாதிபதி தனது முன்னாள் சகாக்களை அரவணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment