உள்ளூராட்சித் தேர்தல் காலவரையறையின்றி பின் போடப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தல் முற்படுத்தப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்க, தனி நபராக இருக்கின்ற நிலையில், தேர்தல் வரை தனக்கான ஆதரவுத் தளத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பெரமுன தரப்பிலிருந்து ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடத் தகுதியுள்ள யாரும் இல்லையென கருதப்படுவதால் ரணிலை கை விடாதிருப்பதே சிறந்த தெரிவென பெரமுன முக்கியஸ்தர்கள் கருதுவதாக அறியமுடிகிறது. இதேவேளை, பசிலை வேட்பாளராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment