பல ஹெல உறுமயக்களைக் கண்டு, கடந்து வந்த சம்பிக்க ரணவக்க, நாட்டை விரைவாக அபிவிருத்தி செய்யும் சரியான பாதையில் மக்களை அழைத்துச் செல்ல, புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார்.
வேறு கட்சிகளின் முக்கியஸ்தர்களின் பிரசன்னத்தில் ஐக்கிய குடியரசு முன்னணி எனும் தனது கட்சியை நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைத்த சம்பிக்க, சரியான பாதையில் பயணிக்கத் தவறியமையால் நாடு பின்னடைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியை இலக்கு வைத்து நல்லாட்சியில் இணைந்திருந்த சம்பிக்க ரணவக்க, ராஜபக்சக்களின் மீளெழுச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment