அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடப்பது உறுதியென தெரிவிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவது மக்களின் கடமையென தெரிவிக்கிறார்.
மூன்று வருடங்களுக்கு முன்பாகவே நாட்டின் தற்போதைய பொருளாதார சிக்கலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கணித்திருந்ததாகவும் உலகில் வேறெங்குமில்லாத வகையில் குறுகிய காலத்துக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவு சீர்படுத்தியிருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இப்பின்னணியில், அனைத்துக் கட்சியினரும் தமது அரசியல் பேதங்களை மறந்து ரணில் விக்கிரமசிங்கவிடம் அதிகாரத்தைக் கையளிக்க ஒத்துழைக்க வேண்டும் என ருவன் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment