ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியமைக்கும் நடவடிக்கைகளை அக்கட்சியினர் மேற்கொண்டு வரும் நிலையில், சமகி ஜன பல வேகய ஆட்டம் கண்டு வருகிறது.
ஹரின் - மனுஷவைத் தொடர்ந்து ராஜித 'அதிருப்தி' குரல் வெளியிட்டிருந்த அதேவேளை, தற்சமயம் தனது உதவி தவிசாளர் பதவியுட்பட கட்சியில் வகித்த அனைத்து பதவிகளையும் துறந்து ஐக்கிய தேசியக் கட்சி தலைவருடன் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் நா.உ, பி. ஹரிசன்.
இதேவேளை, ஹரினின் வழிகாட்டலில் பயணிக்கவுள்ளதாக தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார் வடிவேல் சுரேஷ். பொதுஜன பெரமுனவினர் ஆதரவை வாபஸ் பெறும் பட்சத்தில் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள நாடாளுமன்றில் ஆதரவை அதிகரிக்கும் முயற்சியை ஜனாதிபதி தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment