தேசியத்தை முன்நிறுத்தி உள்நாட்டில் உருவான சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட தமது கட்சியை வீழ்த்த பாரிய சதிகள் நடப்பதாகவும் இருந்தாலும் மக்கள் இன்னும் தமது கட்சியை நம்பியிருப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
வெளிநாட்டு சதியாளர்களுடன், வன்முறையை அடிப்படையாகக் கொண்டுள்ள ஜே.வி.பியினர் நடாத்திய சூழ்ச்சியினாலேயே தமது அரசு கவிழ்க்கப்பட்டதாகவும் ஆனாலும் மக்கள் தமது மீள் வரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தமது ஆட்சிக் கவிழ்ப்புக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் பாரிய பங்களித்ததாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment