2012 - 2019 வரையான காலப்பகுதியில் இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதத்தைத் தூண்டி, அதில் குளிர் காய்ந்த ராஜபக்சக்கள் தற்சமயம் பௌத்த - கத்தோலிக்க மற்களிடையே முறுகலைத் தோற்றுவித்து அதனூடாக மீண்டும் பேரினவாத அலையை உருவாக்க முயல்வதாக குற்றவியல் விசாரணைப் பிரிவில் முறையிட்டுள்ளது அனைத்துக் கட்சி அரகலய உறுப்பினர்கள் சங்கம்.
ஜெரம் பெர்னான்டோ எனும் தமது நெருங்கிய சகா ஊடாக பௌத்த மக்களுக்கு எதிரான கருத்துக்களை விதைத்து, அதனூடாக 5 நூற்றாண்டுகளுக்கு மேலாக நெருங்கி உறவாடி வரும் கத்தோலிக்க - பௌத்த மக்களிடையே இனப் பிரிவினையை உருவாக்க முயல்வதாகவும் இப்பின்னணியில் தகுந்த விசாரணை நடாத்த வேண்டும் எனவும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னைத் தானே கடவுளின் தூதர் என தெரிவித்துக் கொள்ளும் ஜெரம் பெர்னான்டோ ராஜபக்ச குடும்பத்தினரின் தேவைக்காகவே இவ்வாறு சர்ச்சைகளை உருவாக்குவதாக குறித்த சங்கம் தெரிவிக்கின்றமையும் இதன் பின்னணியில் சிம்பாப்வே கருப்பு பண விவகாரமும் தொடர்பு பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment