முல்லைத்தீவு, கொக்கிலாய் பிரதேசத்தில் நிறுவப்பட்டிருந்த சிறிய அளவிலான புத்தர் சிலையை சேதப்படுத்தியதன் பின்னணியில் சந்தேக நபர் ஒருவரை பொலிசார் நேற்று மாலை கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
வடக்கில் திடீரென தோன்றும் புத்தர் சிலைகள் தொடர்பில் அங்கு வாழும் மக்களிடத்தில் அதிருப்தி நிலவி வரும் அதேவேளை எதிர்ப்புகளும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட நபர் மன உளைச்சலுக்கானவரா என பொலிசார் 'ஆராய்வதாக' தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment