25 லட்ச ரூபா ஏலக்காய் திருட்டு: மூவர் கைது - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 May 2023

25 லட்ச ரூபா ஏலக்காய் திருட்டு: மூவர் கைது

 



கொழும்பு துறைமுக வளாளகத்துக்குள், கொள்கலனை உடைத்து சுமார் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஏலக்காய் திருடிய குற்றச்சாட்டின் பின்னணியில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து திருடப்பட்ட ஏலக்காய் மூட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிசார் 40 வயதுக்குட்பட்ட மூவரே கைது செய்யப்பட்டதாக விளக்கமளித்துள்ளனர்.


துறைமுக வளாகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஒன்பது மூட்டைகள் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment