பிரதான எதிர்க்கட்சியாகத் திகழும் சமகி ஜன பல வேகயவுடன் ஐக்கிய தேசியக் கட்சியை கூட்டணியமைக்க அழைப்பு விடுக்கிறது அக்கட்சி.
சமகி ஜன பல வேகயவின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் ரணிலை ஆதரித்து அரசின் பங்காளிகளாக மாறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், 54 உறுப்பினர்களைக் கொண்ட தமது கட்சியுடன் ஒரு ஆசனத்தைக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியமைக்கலாம் என விளக்கமளித்துள்ளார் நலின் பெர்னான்டோ.
தமது கட்சி எதிர்வரும் தேர்தல்களில் பாரிய வெற்றியீட்டுவது நிச்சயம் எனவும் நலின் விளக்கமளிக்கின்ற அதேவேளை, கூட்டணியின் பொது வேட்பாளராக சஜித் பிரேமதாசவே போட்டியிட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment