ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டாட்சியில் இணைவது காலத்தின் கட்டாயம் என தெரிவித்துள்ள ராஜித சேனாரத்ன, விரைவில் அரசில் இணைவார் என வெகுவாக ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இவற்றை நிராகரித்து தெளிவான அறிக்கையொன்றை வெளியிடுமாறு சமகி ஜன பல வேகய ராஜிதவை வேண்டிக் கொண்டுள்ளது. ரணிலின் வேலைத் திட்டங்களை ஆதரிப்பது காலத்தின் கட்டாயம் என தெரிவிக்கும் ராஜிதவுக்கு சுகாதார அமைச்சு பதவியோ பிரதமர் பதவியோ கிடைக்கக் கூடும் என அரசியல் மட்டத்தில் பேச்சு நிலவுவதால் சமகி ஜன பல வேகய இவ்வாறு இக்கட்டை எதிர்நோக்குகின்றது.
புத்தாண்டின் பின் எதிர்பார்க்கப்படும் அரசியல் திருப்பம் குறித்த எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றமையும் இப் பின்னணியில் உள்ளூராட்சி தேர்தல்கள் மறக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment