ஐக்கிய தேசியக் கட்சியையும் சமகி ஜன பல வேகயவையும் இணைப்பதற்கே தாமும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமும் முயற்சித்ததாக விளக்கமளித்துள்ளார் மனோ கணேசன்.
ஆட்சியதிகாரத்தில் ரணில் உறுதியாக அமர்ந்திருப்பதால், தற்போது அவருடன் இணைவதற்கு பல்வேறு தரப்புகள் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றன். இந்நிலையில், பிரிந்திருக்கும் இவ்விரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதன் ஊடாக மீண்டும் ஒரே கட்சியாக ஆட்சியில் பங்கெடுப்பதும் ஒரு தரப்பு விளக்கமாக முன் வைக்கப்பட்டு வருகிறது.
எனினும், சமகி ஜன பல வேகய 'ஆர்வம்' காட்டாததால் இணைப்பு முயற்சி தோல்வி கண்டுள்ளதாக தெரிவிக்கும் மனோ கணேசன், தமிழ் கட்சிகளை கூட்டணி சேர்க்க முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment