சமகி ஜன பல வேகய முதுகெலும்பில்லாத கட்சியென சாடுகிறார் ஜே.வி.பியின் சுனில் ஹந்துன்நெத்தி.
சர்வதேச நாணய நிதியத்திடம் எதைப் பேசப் போகிறோம், எவ்வகையான உடன்பாட்டுக்கு வரப் போகிறோம் என்பதை நாடாளுமன்றுக்கு தெரிவிக்க வேண்டிய பொறுப்புள்ள ஜனாதிபதி, அனைத்தையும் பேசி விட்டு ஒப்புதலுக்காக மாத்திரம் நாடாளுமன்றை நாடிய போதிலும் அதனை எதிர்த்துக் கேள்வி கேட்பதற்கு சமகி ஜன பல வேகயவால் முடியவில்லையென அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலில் நாட்டைக் கொண்டு செல்வது பின் நாளில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என இடது சாரி கட்சிகள் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment