2022ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் மே மாதம் 29ம் திகதி, திட்டமிட்டபடி ஆரம்பமாகும் என தெரிவிக்கிறார் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த.
தேவையான அனைத்து ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 10 நாட்களுக்கு பரீட்சைகள் இடம்பெறும் எனவும் அவர் இன்று நாடாளுமன்றில் விளக்கமளித்துள்ளார்.
அதேபோன்று க.பொ.த உயர் தர விடைத்தாள்கள் திருத்தும் பணியும் நேற்று ஆரம்பமாகியுள்ளதாக அமைச்சர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment