சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள பௌசி, சர்வதேச நாணய நிதிய விவகாரத்தில் நேற்றைய தினம் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததன் பின்னணியில் கட்சித் தலைவர் சஜித்துடன் முறுகலை உருவாக்கியுள்ளார்.
தன் மீது ஒழுக்காற்று விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்ற புலம்பல்களை நிராகரிப்பதாக தெரிவிக்கும் அவர், சர்வதேச நாணய நிதியத்திடம் முதலில் சென்றது தானே என தெரிவிக்கும் சஜித் பிரேமதாசவையே முதலில் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று பௌசி விளக்கமளித்துள்ளார்.
அரசின் சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் வசதிக்கான ஒப்புதலை 25 பேரே எதிர்த்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment