லட்சக்கணக்கான இலங்கை குரங்குகளை ஒரு நாட்டின் ஒரே பிராந்தியத்துக்கு வழங்குவது என்பது, வெளிப்படையாகவே அது பரிசோதனைக்கான கொள்வனவு என்பதை எடுத்துக் காட்டுவதாகவும், இவ்வாறான திட்டம், இலங்கை மிருக அழிப்பில் மறைமுகமாக ஈடுபடுவதற்கான முன்னெடுப்பு எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது Center for Environmental Justice (CEJ).
இலங்கை போன்ற பௌத்த நாட்டுக்கு இது உகந்த செயற்பாடில்லையெனவும் சுட்டிக்காட்டும் அவ்வமைப்பின் நிறுவனர் ஹேமந்த விதானகே, சீனாவில் மிருகக் காட்சி சாலைகளுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுவது அப்பட்டமான பொய்யெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிருகங்களின் இரத்தக் கறையில் அரசு வருவாய் தேடுவதாக அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment