மக்கள் போராட்டத்தின் பின்னணியில் தனது பதவியை இராஜினாமா செய்ய நேரிட்ட தனது சிறிய தந்தை கோட்டாபய ராஜபக்ச, தவறாக எதையும் செய்யவில்லையென தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.
விவசாயிகள் விடயத்தில், அவர் நல்லெண்ண அடிப்படையிலேயே தீர்மானங்களை எடுத்ததாகவும் எனினும் அவை மக்கள் விரோத செயற்பாடுகளாக 'திட்டமிட்டு' பரப்புரை செய்யப்பட்டதனால் தோல்வி கண்டதாகவும் நாமல் விளக்கமளித்துள்ளார்.
எவ்வாறாயினும், தனது சிறிய தந்தை தவறாக எதையும் செய்யவில்லையெனவும், ஆயினும் அவர் எடுத்த அனைத்து முடிவுகளுடனும் தாம் இணங்கவுமில்லையெனவும் நாமல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment