சுதந்திரத்துக்குப் பின் இலங்கையை ஆட்சி செய்த அனைவரது சேவைகளையும் ஒரு தட்டில் வைத்தாலும் பெரமுன ஸ்தாபகர் மஹிந்த ராஜபக்சவின் சேவைகளுக்கு ஈடாகாது என்கிறார் அக்கட்சியில் செயலாளர் சாகர காரியவசம்.
இந்நிலையில், பெரமுன என்கிற அரசியல் கட்சியின்றி நாடு முன் செல்லாது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினருக்கு 2019ல் ஏகபோக ஆதரவளித்த மக்கள், அதே குடும்பத்தினரின் வீழ்ச்சிக்கும் 2022ல் காரணமானார்கள். எனினும், மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என ராஜபக்ச ஆதரவாளர்கள் தொடர்ந்து நம்பிக்கை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment