அக்குறணை மற்றும் பாணந்துறை பகுதிகளில் பள்ளிவாசல் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையென விளக்கமளித்துள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.
பாணந்துறை பகுதி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உலவிய தகவல் பொய்ப் பிரச்சாரம் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துடுவ, அக்குறணை தொடர்பில் 'தகவல்' கிடைக்கப் பெற்றதன் பின்னணியிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதேச பள்ளி நிர்வாகங்களுடன் 'பேசி' ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment