இந்து சமுத்திரத்தில் இந்திய கடற்படையின் நடவடிக்கைகள் மற்றும் இலங்கையில் இந்தியாவின் பிரசன்னத்தை கண்காணிக்கும் வகையில் இலங்கையில் ராடார் தளமொன்றை நிறுவ சீனா முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய ஊடகங்கள் தொடர்ச்சியாக சீன - இலங்கை உறவு மற்றும் இலங்கையில் சீனாவின் பிரசன்னம் தொடர்பில் பல்வேறு கேள்விகளை உருவாக்கி வருகின்ற நிலையில் இத்தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இவ்வாறு ராடார் தளம் நிறுவப்பட்டால், அமெரிக்காவின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க இயலும் என இந்தியாவின் பிரபல வர்த்தக செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment