அமெரிக்காவினால் தனக்கு விதிக்கப்பட்ட தடையானது, ஆச்சரியமாக இருக்கின்ற அதேவேளை, அதன் பின்னணியில் சதி நடந்திருப்பதாக தெரிவிக்கிறார் ஆளுனர் வசந்த கரனகொட.
யுத்தம் நிறைவுற்று 14 வருடங்களின் பின் இவ்வாறு ஒரு தடை வந்திருப்பதற்கு 'பின்புலம்' இருப்பதாக வசந்த சந்தேகம் வெளியிட்டுள்ளார். முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் இலங்கைக்கான அமெரிக்க தூதருடன் இணைந்து இச்சதியை செய்திருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
வசந்த மற்றும் குடும்பத்தாரை கருப்புப் பட்டியலில் அமெரிக்கா இணைத்துள்ளமை குறித்து இலங்கை அரசு அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment