ஜனாதிபதியால் தான் 'புத்தாண்டு' கொண்டாட்டம்: வஜிர - sonakar.com

Post Top Ad

Sunday 9 April 2023

ஜனாதிபதியால் தான் 'புத்தாண்டு' கொண்டாட்டம்: வஜிர

 



அதாள பாதாளத்துக்குள் வீழ்ந்த பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்குப் போராடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தான் இம்முறை மக்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் வஜிர அபேவர்தன.


முன்னாள் ஆட்சியாளர்களால் சின்னாபின்னமாக்கப்பட்ட நாட்டினை ரணில் தற்போது கட்டியெழுப்பி வருவதாக தெரிவிக்கும் அவர், மக்கள் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதேவேளை,. சமகி ஜன பல வேகய தலைவர் சஜித் தமது உறுப்பினர்களைத் தக்க வைத்துக்கொள்ள கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment