இலங்கையிலிருந்து பெருந்தொகை குரங்குகளை ஏற்றுமதி செய்ய அரசு நடவடிக்கையெடுத்து வரும் நிலையில், இது குறித்து பாரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஏற்றுமதி செய்யப்படும் குரங்குகளைப் பெற்றுக் கொள்ளப் போவதாக கருதப்படும் சீனாவின் நிறுவனம், இது குறித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கையில் விவசாய பயிர்ச் செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் குரங்குகளை களைவதற்கு அரசு வழிமுறை தேடுவதாக அறிந்தே, தாம் இக்குரங்குகளை தமது நிறுவனத்தால் இயக்கப்படும் 1000 மிருகக் காட்சி சாலைகளுக்கு வழங்குமாறு கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரசு விலங்குகளை விற்று பணம் சம்பாதிக்க முயல்வதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment