கடந்த வருடம் மே 9ம் திகதி வன்முறைகளின் போது பாதுகாப்பு சபை முக்கியஸ்தரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா இந்தியா சென்றிருந்தமை சந்தேகத்துக்குரியது என விமல் வீரவன்ச தெரிவித்திருந்த கருத்துக்கு உடனடியாக விளக்கமளித்துள்ளது பாதுகாப்பு அமைச்சு.
குறித்த சந்தர்ப்பத்தில் ஏலவே திட்டமிடப்பட்டு, இணங்கப்பட்டிருந்த தெற்காசிய நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ளவே அவர் சென்றிருந்ததாகவும் அதில் சந்தேகம் எதற்கும் இடமில்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய பதவி விலகக் காரணமான குறித்த நிகழ்வுகளின் பின்னணியில் தொடர்ச்சியாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment