பொதுஜன பெரமுனவிலிருந்து அதிருப்தியுடன் வெளியேறி விமல் - கம்மன்பில கூட்டணியில் அமைந்த 'ஹெலிகப்டர்' கூட்டணியிலிருந்து உறுப்பினர்கள் விலகிச் செல்ல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குருநாகல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏலவே சமகி ஜன பல வேகயவுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளதுடன் 'அமைப்பாளர்கள்' பதவிகளையும் பெற்றுக் கொள்ள இணங்கியுள்ளதாக விமல் தரப்பிலிருந்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தை முன்நிறுத்தி, விமல் வீரவன்ச தனது கட்சியை விரிவாக வளர்த்துக் கொண்ட போதிலும் பசில ராஜபக்சவுடனான மோதலின் பின்னணியில் அரசிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment