ரணில் தலைமையிலான ஆட்சியை ஆதரிப்பதற்கு சமகி ஜன பல வேகயவுக்குள் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராஜிதவை அக்கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென சஜித் பிரேமதாசவிடம் முறைப்பாடுகள் வலுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாட்சி கூறியுள்ள நிலையில், ராஜிதவை நீக்குவதில் ஏற்படக் கூடிய சிக்கல்கள் குறித்தும் ஆராயப்படுவதாக கட்சி மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணிலின் அண்மைக்கால நடவடிக்கைகள் பொருளாதார ரீதியில் வீழ்ந்திருந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் அமைந்து வருவதனால் ரணிலின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment