பொதுஜன பெரமுனவில் மீண்டும் மஹிந்த ஆளுமையை நிலை நிறுத்த பாரிய முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், பசிலின் தலையீட்டை நிராகரிக்கும் குழுவினர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கை கோர்ப்பதற்குத் தயாராகி வருவதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சமகி ஜன பல வேகயவுக்குள்ளும் தமது முன்னாள் தலைவர் ரணில் மீதான அபிப்பிராயம் அதிகரிதுள்ளதுடன் ரணிலை மீண்டும் தலைவராக ஏற்றுக் கொள்வதற்கு கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றுக்குள் வேறு கட்சிகளின் ஆதரவற்ற நிலையில் உள்ள ரணில், சமகி ஜன பல வேகய உறுப்பினர்கள் கை கோர்ப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற அதேவேளை, தமது உறுப்பினர்களுக்கு விலை பேசப்படுவதாக சஜித் குறை கூறி வருகின்றமை கறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment