அரசியல் கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களை நடாத்துவதற்கு காலி முகத்திடலில் இனி அனுமதி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20 முறை இவ்விதி முறை நடைமுறைக்கு வரவுள்ள அதேவேளை சமய நிகழ்வுகளுக்கு விதிவிலக்கு வழங்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அரகலயவின் பின்னணியில் காலி முகத்திடல் மறுசீரமைப்புக்கு 220 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வருடாந்தம் இரு பெருநாள் தொழுகைகள் மற்றும் இப்தார் நிகழ்வும் காலிமுகத்திடலில் முஸ்லிம்களால் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment